Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜனவரி (ஹி.ச)
வருகிற ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டுப் பணிகள் குறித்து பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
மாநாட்டுப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாநாட்டு ஏற்பாடுகள், தேர்தல் பணிகள், கூட்டணி குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதன் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பிரேமலதா,
2026 தேர்தலில் யாருடன் கூட்டணி? என மாவட்டச் செயலாளர்கள் தங்களின் கருத்துகளை எழுதி பெட்டியில் போட்டுள்ளனர்.
அவற்றை தனிப்பட்ட முறையில் நான் பிரித்து படிக்க இருக்கிறேன்.
அவர்களின் கருத்து அந்தந்த மாவட்ட மக்களின் கருத்து.
அதன்படியே கூட்டணி குறித்து முடிவு செய்து வரும் 9 ஆம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன்.
தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன.
முழுக்க முழுக்க தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி இருக்கும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN