நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி - திமுக எம்.பி கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.) திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி இன்று (05-01-25) தனது 57 -வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த தினத்தையொட்டி இன்று (05-01-25) காலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவி
நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி  - திமுக எம்.பி கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்


சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)

திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி இன்று (05-01-25) தனது 57 -வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த தினத்தையொட்டி இன்று

(05-01-25) காலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் ஆகியோரின் நினைவிடத்தில் கனிமொழி மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது திமுக தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு கூடி கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் தனது சகோதரரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

அந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது,

பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி - என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் - நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b