Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 05 ஜனவரி (ஹி.ச.)
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் முக.ஸ்டாலினை தமிழக மக்கள் நம்பப்போவதில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூடிய மக்கள் வெள்ளத்திற்கு இடையே வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப்பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
நான்கரை ஆண்டுகள் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, நேற்றைக்கு தான் ஞானோதயம் வந்ததுபோல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் முக.ஸ்டாலினை தமிழக மக்கள் நம்பப் போகிறார்களா என்ன? வாய்ப்பே இல்லை.
இப்போது நீங்கள் போடும் நல்லவர் வேஷம், இத்தனை ஆண்டுகள் நீங்கள் நடத்திய கோர ஆட்சியை இல்லை என்று ஆக்கிவிடுமா? இல்லவே இல்லை.
தமிழக மக்கள் மறக்கவும் மாட்டார்கள்.
உங்களை மன்னிக்கவும் மாட்டார்கள்.
அதை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலம் நீங்கள் உணரப்போவது உறுதி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ