அதிமுக சார்பில் இலவச தையல் பயிற்சி -சான்றிதழ்கள் வழங்கிய இபிஎஸ்
சேலம், 05 ஜனவரி (ஹி.ச.) சேலத்தில் அதிமுக சார்பாக இலவச தையல் பயிற்சி கொடுக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். ஏழை மகளிர் தொழிற்பயிற்சி பெற்று, சுயத்தொழில் தொட
இபிஎஸ்


சேலம், 05 ஜனவரி (ஹி.ச.)

சேலத்தில் அதிமுக சார்பாக இலவச தையல் பயிற்சி கொடுக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

ஏழை மகளிர் தொழிற்பயிற்சி பெற்று, சுயத்தொழில் தொடங்கி வாழ்வில் பொருளாதார மேம்பாடு அடைய அதிமுக சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இலவச தையல் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான மகளிர் தையல் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இங்கு பயிற்சியில் சேரும் பெண்களுக்கு சிறந்த வல்லுநர்களை கொண்டு தையல் கலையில் நுணுக்கமான வேலைப்பாடுகள் மற்றும் நவீன ஆடைகள் வடிவமைக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 4 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சேலம் தாதகாப்பட்டி பகுதியில் அதிமுக தையல் பயிற்சி நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட தையல் பயிற்சி முடித்த பெண்கள், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அப்போது புத்தாண்டு, பொங்கல் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் வாழ்த்து கூறினார்.

Hindusthan Samachar / GOKILA arumugam