Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 05 ஜனவரி (ஹி.ச)
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசியமா மாவட்டத்தில் உள்ள மல்கிபுரம் மண்டலம் இருசு மண்டலா கிராமம் அருகே ஓஎன்ஜிசி எரிவாயு குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டு எரிவாயு பயங்கர சப்தத்துடன் பீச்சி அடித்து வெளியேறி தீப்பற்றி எரிகிறது.
கிராம மக்கள் அளித்த தகவலின் பெயரில் அங்கு சென்ற ஓஎன்ஜிசி மற்றும் தீயணைப்பு படையினர் குழாயிலிருந்து பயங்கர சப்தத்துடன் வெளியேறும் எரிவாயுவை கட்டுப்படுத்தி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிக அளவில் எரிவாயு வெளியேறுவதால் அதனை கட்டுப்படுத்தி தீயை அணைப்பது அதிகாரிகளுக்கு பெரும் சவாலான செயலாக மாறி உள்ளது.
குழாயிலிருந்து வெளியேறும் எரிவாயு அந்த பகுதி முழுவதும் பரவி வருவதால் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு பொதுமக்கள் வராமல் தடுக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பற்றி எரியும் தீயை அணைப்பதற்கு கூடுதல் தீயணைப்பு வாகனங்களை வரவழைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam