Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 05 ஜனவரி (ஹி.ச.)
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 700 டன் குப்பைகள் உற்பத்தி ஆகிறது.
இந்த குப்பைகளை சரியாக கையாளப்படத காரணத்தால் மாநகராட்சி முழுவதும் குப்பை குவிந்து வருகிறது.
திருப்பூர் மாநகராட்சி 55 வார்டு பகுதியில் கடந்த இரண்டு மூன்று மாதமாக குப்பைகள் எடுக்காமல் குப்பைகள் தேங்கியுள்ளது.
தொடர்ந்து அருகில் இருந்த பகுதியில் உள்ள குப்பைகளை இந்த வெள்ளியங்காடு பகுதியில் கொட்டப்பட்டதால் அப்பகுதி மக்கள் இங்கு வசிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தற்போது திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் ( திமுக ) 55 வது வார்டு பகுதியில் உடனடியாக இங்கு கொட்டப்பட்ட குப்பைகளை அல்ல வேண்டும் அதுவரை தண்ணீர் கூட பருக மாட்டேன் தொடர் உண்ணாவிரதம் இருப்பேன் எனவும் நாளை எனது தொகுதியில் மீண்டும் ஒரு வார்டில் போய் உட்காருவேன் என சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam