Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (05.01.2026) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கனோயிங் மற்றும் கயாகிங், சைக்கிளிங், வாள்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், வளைகோல்பந்து, ஜுடோ, கபடி, நீச்சல், நீச்சல் டைவிங், மேசைப்பந்து, டேக்வாண்டோ.
டென்னிஸ், கையுந்துபந்து, பளுதூக்குதல் ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்றுநர் பணியிடங்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான இணையதள விண்ணப்ப பயன்பாட்டினை துவங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி. மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
இப்பயிற்றுநர் பணிகளுக்கான கல்வி தகுதி, அனுபவம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஏனைய விவரங்கள் https://www.sdat.tn.gov.in/என்ற இணையதளத்தில் உள்ளது.
உரிய தகுதி மற்றும் அனுபவம் உள்ள பயிற்றுநர்கள் அதில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை அறிந்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b