மண்பாண்டங்களை கொள்முதல் செய்து அரசு அங்காடிகளில் விற்பனை செய்வதற்கு தமிழக  அரசு முன் வர வேண்டுமென மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கோரிக்கை
தஞ்சாவூர், 05 ஜனவரி (ஹி.ச.) நழிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில், மண்பாண்ட உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சுற்றி உள்ள பகுதிக
மண்பாண்டம்


தஞ்சாவூர், 05 ஜனவரி (ஹி.ச.)

நழிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில், மண்பாண்ட உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மண்பாண்ட உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா சுற்றி உள்ள பகுதிகளில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு மண்பானைகள், மண்அடுப்புகள் தாயார் செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் மூன்று தலைமுறைகளாக மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், மண்பாண்டம் செய்வதற்கு தேவையான மூலப் பொருட்களான களிமண் மற்றும் மண்கள் கொண்டு வருவதில் இடையூறு ஏற்படுவதால் மண்பாண்டம் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகும்.

தமிழர்களின் வாழ்வில் இன்றியமையாத பொருளாக கருதப்படும், மண்பாண்டகளை தமிழக அரசு கொள்முதல் செய்து, அங்காடிகளில் பொங்கலுக்கு கரும்பு பச்சரிசி வழங்குவது போல, தமிழர்களின் பாரம்பரியமாக பொருளாக கருதப்படும் மண்பாண்டங்களை தமிழக முழுவதும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும், நழிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை மேம்படுத்தி, மண்பாண்டம் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட, உதவிட வேண்டுமென மண்பாண்ட தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam