Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 05 ஜனவரி (ஹி.ச)
மதுரை சோழவந்தான் பகுதியில் நடைபெற்ற முன்னால் பேரூராட்சி தலைவர் சோனையா
பிள்ளையின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அதிமுக எதிர்கட்சி துணை தலைவர்
ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர் என நினைத்து தற்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக திமுக அரசு உள்ளது.
திமுக எதிர்கட்சியாக உள்ள போது பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ. 5 ஆயிரம் தர வேண்டும் என ஸ்டாலின் சொன்னார்.
ஆனால் தற்போது தேர்தல் நெருங்கி வருவதால்
தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு தருகிறார்கள். சொல்வது ஒன்று செய்வது ஒன்று ஆக இது பொங்கல் பரிசாக தெரியவில்லை மக்களை ஏமாற்றுகிற தேர்தல் பரிசாக உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஆட்சிக்கு வந்தவுடன் 52 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
தற்போது திமுக அரசு ஆட்சி முடியும் தருவாயில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி
தருகிறார்கள். இது வாக்கு வங்கிக்கான தேர்தல் பரிசுதான்.
மக்களுக்கான திட்டங்களை கொண்டு வராமல் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய பெயரில் திட்டங்களை திமுக அரசு அறிவித்து வருகிறது.
இந்த அரசின் மீது பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர் அது நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும்.
நூறுநாள் திட்டத்தை நிறுத்த போவதாக திமுக அரசு மக்களிடையே பொய்யாக பிரச்சாரம்
செய்து வருகிறது.
அதிமுக மீண்டும் 2026 ல் ஆட்சியமைத்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார். அப்போது நூறு நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தி தரப்படும் என
வாக்குறுதி அளித்துள்ளார்.
தேசிய அளவில் பாஜகவும், மாநில அளவில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் தேர்தல் கூட்டணி உள்ளது. நிச்சயாம NDA கூட்டணி வெற்றி பெறும் இதில் யாரும் குட்டையை கிளப்ப முடியாது.
ஜல்லிகட்டு விவகாரத்தில் கிராம கமிட்டியாளர்களோடு அரசு இணைந்து ஜல்லிகட்டு
போட்டியை நடத்த வேண்டும் இந்த அரசு ஜல்லிகட்டு விசயத்தில் வேறுபடுத்தி காட் டி
செயல்படுகிறது. அடுத்த ஆண்டு ஜல்லிகட்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் கிராம கமிட்டியினர் முன்னிலையில் மண்ணின் மைந்தர்களின் கருத்துக்களை கேட்டு
ஜல்லிகட்டு போட்டி நடத்தப்படும்.
பொங்கல் பரிசு தொகுப்பு பணத்தை திமுகவினரே வீடு வீடாக தரப்போவதாக
கூறப்படுகிறது, வட்டச் செயலாளர், கட்சிகாரர்களை கொண்டு பரிசு தொகுப்பினை
கொடுத்தாலும் மக்கள் மத்தியிலே அதிருப்தி உள்ளது. தை பிறந்தால் வழி பிறக்கும்.என்றார்.
செங்கோட்டையனை தொடர்ந்து OPS தவெக கட்சிக்கு போவதாக தகவல் வெளியாகியுள்ளதே
என்ற கேள்விக்கு,
தெரியாத கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என கூறினார்.
மதுரையில் நடந்த சொத்துவரி முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றம்
செய்தவர்களை கண்டிக்க வேண்டும் என சட்டசபையிலே கேள்வி எழுப்பினோம் ஆனால்
அதற்கு பதிலாக மேயர், மண்டல தலைவர்கள் ராஜீனமா என முடித்து விட்டனர். உரிய
விசாரணை நடத்த வேண்டும் என மதுரை மக்கள் மற்றும் தமிழக மக்கள் எதிர்பார்கின்றனர்.என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam