Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியின் மண்டலம் 5 மற்றும் 6 தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பணி நிரந்தரம் கோரியும், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புத்தாண்டு அன்று நள்ளிரவில் சென்னை வேளச்சேரி பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். தொடர்ச்சியாக நாள்தோறும் ஒவ்வொரு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் இன்றைய தினம் கூவம் ஆற்றில் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் 158-வது நாளான இன்று (ஜனவரி 05) கூவம் ஆற்றில் இறங்கி தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் கூவம் ஆற்றின் உள்ளே இறங்கிய 20-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b