Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 5 ஜனவரி (ஹி.ச.)
அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல் ஆனது சலுகை வாங்க விலையில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் ஆனது அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
தற்போது அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடலுக்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் கிடைக்கும்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ப்ரொஜெக்டர் அம்சங்கள்:
8கே அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் மற்றும் 1080பிக்சல் ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் ஆதரவுகளுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. குறிப்பாக 8கே அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன் உள்ளதால் வேற லெவல் வீடியோ குவாலிட்டி கிடைக்கும். சக்தி வாய்ந்த அம்லாஜிக் டி972 சிப்செட் உடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல் வெளிவந்துள்ளது.
அம்லாஜிக் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். 16W பில்ட்-இன் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ப்ரொஜெக்டர் . எனவே இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தைத் தரும். வாய்ஸ் எனேபிள்டு ரிமோட் கண்ட்ரோல் கொண்டுள்ளது இந்த ப்ரொஜெக்டர்.
அதே போல் 6700 லூமென்ஸ் எல்இடி லேம்ப் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். பின்பு இதில் 120 இன்ச் வரையில் புரோஜெக்சன் செய்து கொள்ள முடியும். எனவே இது பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதி இந்த சாதனத்தில் உள்ளது. அதுவும் கீஸ்டோன் கரெக்சன், ஆட்டோ போகஸ் ஆதரவுகளைக் கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடல். மேலும் ப்ரீ-லோட் செய்யப்பட்ட ஓடிடி ஆப் வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
எனவே ஒடிடி-இல் வெளியாகும் புதிய படங்களை இதன் உதவியுடன் சிறந்த தரத்தில் பார்க்க முடியும். இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
பெஸ்ட் ஸ்கிரீனிங் அனுபவத்துக்காக இன்டலிஜென்ஸ் ஆட்டோமேட்டிக் அப்ஸ்டகில் அவாய்டன்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த ப்ரொஜெக்டர். அதுவும் புளூடூத், வைஃபை, ஐ/ஓ போர்ட்கள், ஏயூஎக்ஸ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன.
மேலும் ஆண்ட்ராய்டு 9 மூலம் இந்த சாதனம் இயங்குகிறது. பின்பு போர்ட்ரானிக்ஸ் பீம் 500 ப்ரொஜெக்டர் முழுமையாகச் சீல் செய்யப்பட்ட ஆப்டிகல் என்ஜின் வடிவமைப்பு கொண்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM