‘இசிஐநெட்’ மொபைல் செயலியை மேம்படுத்த ஜனவரி 10-ம் தேதி பரிந்துரைகளை வழங்கலாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
புதுடெல்லி , 05 ஜனவரி (ஹி.ச.) தேர்தல் தொடர்பான 40 செயலிகள் மற்றும் இணையதளங்களை ஒருங்கிணைத்து, ‘இசிஐநெட்’ (ECINet) என்ற பெயரில் புதிய மொபைல் செயலியை தலைமை தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது. இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறி
‘இசிஐநெட்’ மொபைல் செயலியை மேம்படுத்த ஜனவரி 10-ம் தேதி பரிந்துரைகளை வழங்கலாம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


புதுடெல்லி , 05 ஜனவரி (ஹி.ச.)

தேர்தல் தொடர்பான 40 செயலிகள் மற்றும் இணையதளங்களை ஒருங்கிணைத்து, ‘இசிஐநெட்’ (ECINet) என்ற பெயரில் புதிய மொபைல் செயலியை தலைமை தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது.

இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தற்போது இசிஐநெட் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்-ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். தேர்தல் தொடர்பான அனைத்து செயலிகள் மற்றும் இணைய தளங்களை ஒன்றிணைத்து, ஒரே செயலியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த செயலி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ஆலோசனைப்படி வடிவமைக்கப் பட்டுள்ளது. இதை பயன்படுத்துவது மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், மற்ற துறை அதிகாரிகள் அளிக்கும் பரிந்துரைகளை ஆய்வு செய்து தொடர்ந்து ‘இசிஐநெட்’ செயலி மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது மக்கள் அளிக்கும் பரிந்துரைகளை முழு கவனத்துடன் ஆய்வு செய்து இசிஐநெட் செயலி மேம்படுத்தப்படும். இந்த செயலி இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

எனவே, நாட்டு மக்கள் அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, இதை மேம்படுத்துவதற்கான தங்கள் பரிந்துரைகளை வழங்கலாம். ஜனவரி 10-ம் தேதி பொதுமக்கள் தங்கள் பரிந்துரைகளை, ‘சப்மிட் ஏ சஜ்ஜசன்’ என்ற பகுதியை தேர்வு செய்து அனுப்பலாம். இந்த இசிஐநெட் செயலி வாக்காளர்களுக்கு சிறந்து சேவையை வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b