குடியரசு தினத்தில் ஆளுநர் ரவி வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு
சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.) சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு
குடியரசு தினத்தில் ஆளுநர் ரவி வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக செல்வப்பெருந்தகை அறிவிப்பு


சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று

(ஜனவரி 05)வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாடு மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் குடியரசு தினத்தன்று வழங்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b