Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜனவரி (ஹி.ச.)
துரோகி யார் - எதிரி யார் நண்பன் யார் என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இது தேர்தல் நேரம். தமிழ்நாட்டின் நலனும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்
நலனும் தான் முக்கியம் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
அமமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
அதனை
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதன் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது:
இன்று நடைபெற்ற பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் 99 சதவீத பொதுக்குழு
செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். எதிரிகளுடன் போக வேண்டுமா
துரோகிகளுடன் போக வேண்டுமா நண்பர்களுடன் போக வேண்டுமா என்பதை பொதுச் செயலாளர்
முடிவு எடுக்க வேண்டும் என்றார்கள்.
தேர்தல் நேரத்தில் துரோகி, எதிரி, நண்பன்
என்பதெல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் மக்களின் நலனும் அம்மா மக்கள் முன்னேற்றக்
கழகத்தின் நலனும் தான் முக்கியம்.
துரோகி யார் எதிரி யார் நண்பன் என்று
பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இது தேர்தல் நேரம் தமிழ்நாட்டின் நலனும் அம்மா
மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நலனும் தான் முக்கியம்.
செங்கோட்டையன் நான்
மிகவும் மதிக்கின்ற ஒரு சகோதரர். இன்னும் ஒரு மாத காலம் நேரம் இருக்கிறது. தமிழகத்தின் நலன் கருதி நல்ல முடிவு எடுப்போம். இந்த முறை எந்த கூட்டணி வெற்றி
பெற்றாலும் கூட்டணி ஆட்சி அமைக்கின்ற ஒரு சூழ்நிலை தான் உருவாகி இருக்கிறது. நாங்கள் இடம்பெறுகின்ற கூட்டணி தான் உறுதியாக வெற்றி பெறும்.
லயோலா கருத்துக்கணிப்பை பற்றி நான் குறை சொல்ல விரும்பவில்லை. மற்ற
கருத்துக்கணிப்புகளை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. 2026 மே மாதம் தமிழ்நாட்டு மக்களின் கருத்து கணிப்பு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த ஆட்சி முடிவுக்கு வருகின்ற
ஒரு நேரத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி
இருக்கிறார்கள். அதே நேரத்தில் கிட்டத்தட்ட இந்த பென்ஷன் ஆணையத்திற்கு
அறிவித்ததை நிறைவேற்றவே 13,000 கோடியும் இன்னும் 11 ஆயிரம் கோடியும் அதற்காக
நிதி ஒதுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அவ்வளவு நிதியை எப்படி நிதி மேலாண்மை
செய்யப் போகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. அதே நேரத்தில் அங்கன்வாடி
ஊழியர்கள் பகுதிநேர ஆசிரியர்கள் போராடிக் கொண்டுதான் உள்ளார்கள். இதெல்லாம்
இந்த ஆட்சியாளர்களின் சரியாக செயல்படவில்லை என்றால் உறுதியாக இது அவர்களுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்பதுதான் இது காட்டுகிறது.
இந்த மாதத்திற்குள்ளாக கூட்டணி குறித்து அறிவிப்பு வந்துவிடும். எதிரி என்று யாரையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. துரோகி என்று நண்பன் என்று யாரையும் பார்க்கவில்லை அவசியம் இல்லை.
யாரிடமும் சமரசமும் செய்து கொள்ள மாட்டோம்
கூட்டணி ஆட்சி தான் அமையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெறுகின்ற
கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சி
அதிகாரத்தில் பங்கு பெறும்.
தேர்தல் வாக்குறுதி கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் போது நிறைவேற்றி இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக
இருக்கிறார்கள்.
இதை இவர்கள் எப்படி நிறைவேற்ற போகிறார்கள். ஏனென்றால் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதும் மக்களை ஏமாற்றுவதும் தான்
இவர்களின் நடவடிக்கையாக உள்ளது.
இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
Hindusthan Samachar / GOKILA arumugam