Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 5 ஜனவரி (ஹி.ச.)
சந்திர கிரகணத்தையொட்டி வருகிற மார்ச் 3-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பத்தரை மணி நேரம் நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
மார்ச் 3-ந்தேதி மாலை 3.20 மணியில் இருந்து மாலை 6.47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கோவில் நடைகளை மூடும் பாரம்பரியம் உள்ளது. அதன்படி, மார்ச் 3-ந்தேதி காலை 9 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படும். கோவில் சுத்தி உள்ளிட்ட பரிகார சடங்குகள் முடிந்ததும் இரவு 8.30 மணிக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணம் காரணமாக கோவிலில் மார்ச் 3-ந்தேதி நடக்க இருந்த அஷ்டதல பாதபத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படும்.
இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசன திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM