Enter your Email Address to subscribe to our newsletters

நியூயார்க், 5 ஜனவரி (ஹி.ச.)
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐ.நா. பொது சபையின் தலைவரான அன்னலேனா பேயர்போக் வெனிசுலா விவகாரம் பற்றி சுட்டி காட்டி பேசினார்.
இது குறித்து அவர் கூறும் போது,
ஐ.நா. சாசனத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டியது கட்டாயம். அது இஷ்டத்திற்கு செயல்படுவதற்கானது அல்ல.
அமைதியான நேரத்திலும் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையால், வெனிசுலாவில் இன்று ஏற்பட்டிருப்பது போன்ற நெருக்கடியான காலங்களிலும் கூட, சர்வதேச செயல்பாட்டுக்கு வழிகாட்டும் எங்களுடைய கட்டமைப்பாகும்.
இதே போன்று, ஐ.நா. சாசனத்தின் பிரிவு 2 ஆனது, ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும், எந்தவொரு நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலில் ஈடுபடுவது அல்லது படையை பிரயோகிப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
ஐ.நா. சபையின் நோக்கங்களுக்கு எதிராக எந்த வகையிலும் செயல்படாமல் தவிர்க்க வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது.
உலக நடைமுறையை, சட்டத்திற்கு பதிலாக ஆட்சியதிகாரம் கொண்டு நிர்வகிப்பதற்கு எதிராக அவர் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளார்.
வலிமையே சரியானவற்றை செய்யும் என்பதற்கு பதிலாக சட்டத்தின் ஆட்சி இருக்கும்போதுதான், அமைதியான, பாதுகாப்பான மற்றும் ஒவ்வொருவருக்கும் கிடைக்க கூடிய உலகம் என்பது சாத்தியப்படும்.
ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளிப்பது என்பதே சர்வதேச கட்டளைக்கு அடித்தளம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Hindusthan Samachar / JANAKI RAM