கடல் வளங்கள் எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தமானது அல்ல - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
கோவா, 05 ஜனவரி (ஹி.ச.) இந்திய கடலோர காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான சமுத்திரா பிரதாப் கப்பலை, கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (ஜனவரி 05) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ
கடல் வளங்கள் எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தமானது அல்ல - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்


கோவா, 05 ஜனவரி (ஹி.ச.)

இந்திய கடலோர காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பலான சமுத்திரா பிரதாப் கப்பலை, கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (ஜனவரி 05) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சமுத்திரா பிரதாப் கப்பலில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 60 சதவீதம் உள்நாட்டை சேர்ந்தவை. இந்த கப்பல் 114. 5 மீட்டர் நீளம், 4,200டன் எடை கொண்டது. 6 ஆயிரம் கடல் மைல் தூரம் வரை செல்லக்கூடியது. இக்கப்பலில் ரசாயன கண்டுபிடிப்பு கருவிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் மாசுவை அகற்றும் இதர சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

தொலை நோக்கு பார்வையுடன் இந்திய கடற்படையில் சமுத்தர பிரதாப் கப்பல் இணைக்கப்பட்டு உள்ளது. கடல் வளங்கள் எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தமானது அல்ல. கடலோர காவல் படையில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து அதிகாரம் அளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எங்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். சமுத்திர பிரதாப் கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

இந்த கப்பலை இயக்குவது நமது வலிமையை அதிகரிக்கும். இந்த கப்பல் நமது கூட்டு முயற்சியின் அடையாளம். மாசு கட்டுப்பாட்டை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது இன்றைய சவால்களை எதிர்கொள்ள மிகவும் அவசியம்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Hindusthan Samachar / vidya.b