மத்திய அமைச்சர் அமித்ஷா ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்கிறார்
திருச்சி, 05 ஜனவரி (ஹி.ச.) தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பி
மத்திய அமைச்சர் அமித்ஷா திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்கிறார்


திருச்சி, 05 ஜனவரி (ஹி.ச.)

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் கடந்த அக்டோபர் 12-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்கினார்.

பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை பள்ளத்திவயல், கருவேப்பிலான் கேட் பகுதியில் நேற்று (ஜனவரி 04) மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (ஜனவரி 04) தமிழகம் வருகை தந்தார்.

நேற்று புதுக்கோட்டை மாநாட்டில் கலந்து கொண்ட அவர் சட்டப்பேரவைத் தேர்தலில் எப்பாடு பட்டாவது, திமுக ஆட்சியை ஒழித்துக் கட்டுவோம். இந்தியாவில் ஊழல் நிறைந்த கட்சி, ஆட்சி என்றால், அது தமிழகத்தின் திமுக ஆட்சி தான் என ஆவேசமாக பேசினார்.

இந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து சாலை வழியாக திருச்சிக்கு வந்த அமித்ஷா ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். 2 ஆம் நாளான இன்று(ஜனவரி 05) காலை ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யுள்ளார்.

அதைத்தொடர்ந்து, மன்னார்புரத்தில் நடைபெறவுள்ள மோடி பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ளார்.

திருச்சியில் பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமித்ஷாவின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b