டெல்லி கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜில் இமாமுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
புதுடெல்லி, 05 ஜனவரி (ஹி.ச.) டெல்லியில் 2020ஆம் ஆண்டு நடந்த சிஏஏ போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். 700-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டதாக ஜேஎன்யு மாணவர் உ
டெல்லி கலவர வழக்கில் உமர் காலித், ஷர்ஜில் இமாமுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு


புதுடெல்லி, 05 ஜனவரி (ஹி.ச.)

டெல்லியில் 2020ஆம் ஆண்டு நடந்த சிஏஏ போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

700-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டதாக ஜேஎன்யு மாணவர் உமர் காலித் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

உமர் காலித், ஷர்ஜில் இமாம் மற்றும் 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 5 ஆண்டுகளாக உமர் காலித் உள்ளிட்ட 7 பேருக்கும் ஜாமின் மறுக்கப்பட்டதால் சிறையில் உள்ளனர். 7 பேரின் ஜாமின் மனுவை விசாரணை நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் 2 முறை நிராகரித்துவிட்டது. இந்த நிலையில் 2020 டெல்லி கலவர வழக்கில் உமர் காலித், டீ ஷர்ஜில் இமாம் உள்ளிட்ட 7 பேர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (ஜனவரி 05) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உமர் காலித், ஷர்ஜில் இமாம் தவிர மற்ற 5 பேருக்கும் உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தீர்ப்பின் விவரம் பின்வருமாறு :

சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் (UAPA), ஜாமீனுக்கான வரம்பு அதிகமாக உள்ளது. அனைத்து மேல்முறையீட்டாளர்களும் குற்றத்தின் அடிப்படையில் சமமான நிலையில் இல்லை என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. எனவே, ஒவ்வொரு மேல்முறையீட்டையும் தனித்தனியாக ஆராய்வது அவசியமாகிறது. மற்ற குற்றவாளிகளுடன் ஒப்பிடும்போது, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் ஆகியோர் முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளனர்.

உமர் காலித் மற்றம் ஷர்ஜீல் இமாம் ஆகியோருக்கு எதிராக முதல்நிலை குற்றச்சாட்டுக்கள் இருப்பதற்கான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பித்துள்ளது. இதில், நீதிமன்றம் திருப்தி அடைகிறது. எனவே, இந்த வழக்கு விசாரணையின் இந்த கட்டத்தில் அவர்களுக்கு ஜாமீன் வழங்குவது நியாயமற்றது.

அதேநேரத்தில், குல்பிஷா பாத்திமா, மீரான் ஹைதர், ஷிஃபா உர் ரஹ்மான், முகமது சலீம் கான், ஷதாப் அகமது ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படுவதால் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை அது நீர்த்துப்போகச் செய்யாது.

சில கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டே அவர்களை ஜாமீல் விடுவிக்க வேண்டும். நிபந்தனைகளை அவர்கள் மீறினால் அவர்களது ஜாமீன் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b