Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
கொரோனா தொற்றில் இருந்து தமிழக அரசு மீண்டு பொருளாதாரத்தில் இரட்டை இலக்கை எட்டியுள்ளதாகவும்,
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலமாக உள்ளதோடு, நிதி நெருக்கடி இருந்தாலும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.
மேலும், மக்கள் வரியிலிருந்து கிடைக்கப்பெறும் பணத்தை கொண்டு பயனுள்ள திட்டங்களையே செயல்படுத்துவதாக கூறிய அவர், ஒரு கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 'உங்க கனவை சொல்லுங்கள்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள கனவினை தெரிந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறிய அவர், உங்க கனவை சொல்லுங்க திட்டத்திற்காக 50,000 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதோடு,
தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று அவர்களின் கனவுகள் பற்றி ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசின் திட்டங்களில் எது உங்களுக்கு பயனுள்ள திட்டம்? உங்களின் கனவு என்ன? என்ற கேள்விகளை கேட்டு பதில் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இளைஞர்களின் கனவுகள் என்ன என்றும் கேட்டறியந்து செயலி மூலம் அவர்களின் பதிலை பெற்று பதிவு செய்து கனவு அட்டை என்ற புதிய அட்டை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
2030-ம் ஆண்டிற்குள் செய்ய வேண்டிய பணிகளுக்காக உங்க கனவை சொல்லுங்க திட்டம் செயல்படுத்த உள்ள நிலையில், 'உங்க கனவை சொல்லுங்க' திட்டத்தை வருகிற 9-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ