பிராட்வே பேருந்து நிலைய இடமாற்றம் தற்காலிக நிறுத்தம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னை, 06 ஜனவரி (ஹி.ச) பிராட்வே பேருந்து நிலையம் உடனடியாக மாற்றப்படமாட்டாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரு
பிராட்வே பேருந்து நிலையம் இடமாற்றம் தற்காலிக நிறுத்தம் - போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு


சென்னை, 06 ஜனவரி (ஹி.ச)

பிராட்வே பேருந்து நிலையம் உடனடியாக மாற்றப்படமாட்டாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் நாளை முதல் (ஜனவரி 7-ம் தேதி) தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

நிர்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் இடமாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பிராட்வே பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பேருந்து நிலைய மாற்றத்திற்கான அடிப்படை வசதிகள், போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் பயணிகள் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் குறித்து மேலும் ஆய்வு நடைபெற்று வருவதால் அனைத்தும் முடிவடைந்த பின்னரே இறுதி தேதி அறிவிக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.

Hindusthan Samachar / vidya.b