Enter your Email Address to subscribe to our newsletters

வாஷிங்டன், 6 ஜனவரி (ஹி.ச.)
வெனிசுலா மீது அமெரிக்க போர் விமானங்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தின. போதைப்பொருள் பயங்கரவாத குற்றச்சாட்டின்பேரில், அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்து, அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றன.
இந்நிலையில், வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை புதிய இடைக்கால அதிபராக வெனிசுலா சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது. அதிபருக்குரிய கடமைகள், அதிகாரங்கள் அவருக்கு அளிக்கப்படுவதாக கூறியுள்ளது.
இந்நிலையில், டிரம்ப்புக்கு மிகவும் நெருக்கமான, ஸ்டீபன் மில்லர் என்பவரின் மனைவி காதே மில்லர், சமூக ஊடகத்தில் கிரீன்லாந்து வரைபடத்தை அமெரிக்க கொடியுடன் வெளியிட்டு, அடுத்து விரைவில் எனக்கூறியிருந்தார்.
இது தொடர்பாக டென்மார்க் பிரதமர் கேத்தே பிரெட்ரிக்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவிடம் நேரடியாக சொல்லிக் கொள்கிறேன். கிரீன்லாந்து உடன் இணைந்து டென்மார்க் நேட்டோவில் உறுப்பு நாடாக உள்ளது. அந்த அமைப்பின் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெற்றுள்ளது. கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம். கிரீன்லாந்தை எடுத்துக் கொள்வோம் என மிரட்டுவதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிறுத்த வேண்டும்;
எனவே வரலாற்று ரீதியாக நெருங்கிய நட்பு நாடான ஒரு நாட்டிற்கும், தங்களை விலைபேச முடியாது என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ள மற்றொரு நாட்டிற்கும், அதன் மக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களை நிறுத்துமாறு அமெரிக்காவை நான் வலியுறுத்துகிறேன். டென்மார்க்கின் பகுதிகளை இணைத்துக் கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடிரிக்சன் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்து நியூயார்க் சிறையில் அடைத்துள்ள நிலையில் டென்மார்க் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM