இபைலிங் கட்டாயமாக்கப்பட்டது தொடர்பாக பொங்கலுக்கு பிறகு உரிய முடிவெடுக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.) தமிழக முழுவதும் கிழமை நீதிமன்றங்களில் இபைலிங் நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மற்றும் பா
Madras High Court


சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)

தமிழக முழுவதும் கிழமை நீதிமன்றங்களில் இபைலிங் நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இ- பைலிங் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா,

நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு நடைபெற்றது.

அப்போது சங்கங்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ் பிரபாகரன் இ ஃபைலிங் நடைமுறையால் வழக்கமாக தாக்கல் செய்யப்படும் நடைமுறைக்கு முழுமையாக தடை விதிக்க கூடாது என வாதிட்டார். இ ஃபைலிங் நடைமுறையோடு நேரடியாக வழக்கு தாக்கல் செய்யும் முறையும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த பிரச்சினை குறித்து பொங்கலுக்கு பிறகு உரிய முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ