அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு
சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.) தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சென்னை லோக் பவனில் இன்று (ஜனவரி 06) காலை 11 மணி அளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியுட
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திப்பு


சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சென்னை லோக் பவனில் இன்று (ஜனவரி 06) காலை 11 மணி அளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி,தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் மற்றும் நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர் ஆளுநர் ரவியை சந்தித்து மனுவினை கொடுத்தனர்.

திமுக அரசுக்கு எதிராக பல்வேறு விவகாரங்கள் அடங்கிய மனுவை கவனர் ரவியிடம் எடப்பாடி பழனிசாமி கொடுத்தார் என்கிறது அதிமுக வட்டாரம்.

அந்த மனுவில் உள்ள விஷயங்கள் என்ன என்பது குறித்தான விவரம் செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அரசியல் சூழ்நிலையில் இது போன்ற சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

Hindusthan Samachar / vidya.b