மெட்ரோ ரெயில் அதிகாரி வீட்டில் தீ விபத்து - 10 வயது சிறுமி உள்பட 3 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி, 06 ஜனவரி (ஹி.ச.) இந்திய தலைநகர் டெல்லியில் இயங்கி வரும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த அஜய் விமலின் (வயது 45) மனைவி நீலம் (வயது 38) ஆவார். இந்த தம்பதிக்கு ஜான்வி (வயது 10) என்ற மகள் இருந்தார். இதனிடைய
மெட்ரோ ரெயில் அதிகாரி வீட்டில் தீ விபத்து - 10 வயது சிறுமி உள்பட 3 பேர் உயிரிழப்பு


புதுடெல்லி, 06 ஜனவரி (ஹி.ச.)

இந்திய தலைநகர் டெல்லியில் இயங்கி வரும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்த அஜய் விமலின்

(வயது 45) மனைவி நீலம் (வயது 38) ஆவார். இந்த தம்பதிக்கு ஜான்வி (வயது 10) என்ற மகள் இருந்தார்.

இதனிடையே, அஜய் குடும்பத்துடன் முகுந்த்பூர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் வசித்து வந்தார். இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 5வது மாடியில் இன்று (ஜனவரி 06) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அஜய் வசித்து வந்த வீட்டில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும், இந்த தீ விபத்தில் அஜய் அவரது மனைவி நீலம், மகள் ஜான்வி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து, 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b