Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 06 ஜனவரி (ஹி.ச.)
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு-கரூர் சாலை, பாசூர் அருகே காளிங்கராயன் வாய்க்காலில், மீன்கள் இறந்து மிதந்தன. இதுகுறித்த புகாரின்படி சென்ற, ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். ஆலை கழிவுநீர், சுத்திகரிப்பு செய்யாமல் வாய்க்காலில் கலந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து அப்பகுதி ஆலைகளை ஆய்வு செய்ததில், நஞ்சை ஊத்துக்குளியில் இயங்கும் தனியார் கால்நடை தீவன ஆலை கழிவுநீரை வெளியேற்றியது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது,
தனியார் கால்நடை தீவன ஆலையின், தானியங்கி சுத்திகரிப்பு இயந்திரம் இயங்காத நிலையில், கழிவு நீரை நஞ்சை ஊத்துக்குளி சாக்கடையில் விட்டுள்ளனர். அது ஓடையில் கலந்து, காளிங்கராயன் வாய்க்காலில் கலந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பு குழு தலைவரான கலெக்டர் கந்தசாமியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி ஆலையின் மின் இணைப்பை துண்டிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.
Hindusthan Samachar / vidya.b