பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணி - ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜனவரி 9ம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.) பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ
பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணி - ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜனவரி 9ம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)

பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள்.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/- வழங்கிட மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதற்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு ஜனவரி 9ம் தேதி வெள்ளிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 8ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதனைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகின்றனர்.

இதற்கான டோக்கன் விநியோகம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பரிசுத் தொகுப்புகளை வழங்குவதற்காக வருகிற 9ம் தேதி வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளுக்கு பதிலாக பிப்ரவரி 7-ம் தேதி விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b