பழிக்கு பழி என்று கொலையில் முடிந்த விபரீதம் - தப்பியோடிய கொலையாளிக்கு போலீசார் வலை வீச்சு
திருச்சி, 06 ஜனவரி (ஹி.ச.) திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ மணக்கால் புதுத் தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ரவீந்திரன்(25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் கமலேஷ்(27) என்பவருக்கும் கடந்த தீபாவளியின் போது தகராறு ஏற
Lal Kudi Police Station


திருச்சி, 06 ஜனவரி (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ மணக்கால் புதுத் தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் ரவீந்திரன்(25).

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் கமலேஷ்(27) என்பவருக்கும் கடந்த தீபாவளியின் போது தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது கமலேஷை ரவீந்திரன் பீர் பாட்டிலால் தாக்கி உள்ளார். இது தொடர்பாக ரவீந்திரன் சிறை சென்று ஜாமினில் வெளியே வந்துள்ளார். தன்னை தாக்கிய ரவீந்தரனை பழிக்கு பழி வாங்க வேண்டும் என கமலேஷ் காத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் லால்குடியில் இருந்து அன்பில் செல்லும் சாலையில் மணக்கால் ரயில்வே கேட்டில் ரவீந்திரன் நின்று கொண்டு இருந்த போது கமலேஷ், ரவீந்திரனை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரவீந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள கமலேஷை தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN