Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜனவரி (ஹி.ச)
திருப்பரங்குன்றம் மலைக்கோவில் தீபத்தூணில் , தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்து பேசியபோது,
திருப்பரங்குன்றம் வழக்கில் சட்டத்துக்கு புறம்பான தீர்ப்பு நீதியரசர்களால் வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழ்நாடு அரசும், அறநிலையத்துறையும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
தீபத் தூண் என்ற தூணில் முன்பு தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரங்களும் இன்றி இந்த தீர்ப்பை அளித்துள்ளனர். காமராசர் , ராஜாஜி , புரட்சி தலைவர் எம்ஜிஆர் , கருணாநிதி , ஜெயலலிதா என பலர் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் எப்போதும் தூணில் தீபம் ஏற்கப்படவில்லை.
ஜெ. ஆட்சிக் காலத்திலேயே தீபத் தூண் என்பதில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.
முழுக்க முழுக்க சட்டத்துக்கு முரணான தீர்ப்பு.
உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முழுஉரிமை எங்களுக்கு உண்டு.
தமிழர்களின் கலாசாரம் , பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் இதுவரை இல்லாத நடைமுறையை புகுத்த முற்படுகின்றனர்.
சர்வே கல் என்பதற்கு ஆதாரம் சமர்ப்பித்தீர்களா என்று கேட்கிறீர்கள்,ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
நீதிமன்றத்தில் எல்லா தரவுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் எடுத்து வைத்து வாதாடினோம்.
சுடுகாட்டில்தான் உடலை எரிக்க வேண்டும் என்றால் சுடுகாட்டில்தான் எரிக்க வேண்டும். வேறு இடத்தில் எரிக்க மாட்டர். அதுபோல எந்த பழக்க வழக்கத்தையும் மாற்ற கூடாது. ஒரு இடத்தில் இதுதான் நடக்க வேண்டும் என்றால் அந்த இடத்தில் அதுதான் நடக்க வேண்டும்.
இந்த தீர்ப்பின் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். இல்லாத ஒரு வழக்கத்தை புகுத்த கூடாது.
அரசின் மீது எந்த குற்றச்சாட்டையும் நீதிமன்றம் கூறவில்லை. இல்லாத ஒரு வழக்கம் வந்து விடக் கூடாது என்பதால்தான் அமைதியான சூழலை காக்கும் நோக்கத்தோடு காவல்துறை அன்று 144 தடை உத்தரவு போட்டது. காவல்துறை தடுக்காவிட்டால் அவர்கள் தீபம் ஏற்றி இதுவரை இல்லாத ஒரு நடைமுறையை இனி கொண்டு வந்திருப்பர். பாஜக அரசியல் உள்நோக்கத்துடன் மதக் கலவரத்தை உண்டாக்கும் லட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பை பெறுவோம். எந்த காலத்திலும் அங்கு தீபம் ஏற்றப்படதற்கு ஆதாரம் இல்லை.
அந்த மலையில் அருகிலேயே தர்கா இருப்பதால் சர்வே கல் ஊன்றப்பட்டிருக்கலாம்.
10 ஆண்டு நாட்டை ஆண்டு லஞ்ச லாவண்யத்தை தலைவிரித்து ஆட வைத்த எடப்பாடி பழனிசாமி எங்கள் மீது குற்றம் சுமத்துவது வேடிக்கையாக உள்ளது.
இடி,ஐடி என எந்த சோதனையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ