Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 06 ஜனவரி (ஹி.ச.)
திருந்தாத இந்து விரோத திமுக அரசு துரத்தியடிக்கப்படும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற தடைவிதிக்கக் கோரும் திமுக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, தீபமேற்ற அனுமதித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மீண்டும் ஒருமுறை நீதியை நிலைநாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்னும் போலி பிம்பத்தைத் தங்கள் சொந்த வசதிக்கு ஏதுவாகப் பயன்படுத்துவது தவறானது எனத் திமுக அரசிற்கு சம்மட்டியடி கொடுத்து, தீபத்தூண் என்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கே உரித்தானது என்று ஆணித்தரமாக நிலைநாட்டிய நீதிமன்ற அமர்வுக்கு எனது உளமார்ந்த நன்றிகள்!
தொடர்ந்து பலமுறை நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியும் திருந்தாமல், திரும்பத் திரும்ப இந்து விரோத விஷத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கும் அரசு தனது அராஜகக் கொட்டத்தாலேயே கோட்டையிலிருந்து துரத்தியடிக்கப்படும்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam