நாமக்கல்லில் கரும்புகளை கொள்முதல் செய்யாத அதிகாரிகளை கண்டித்து கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
நாமக்கல், ஜன.06 (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சமய சங்கிலி பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கருப்பு பொங்கல் கரும்பு பயிரிட்டுள்ளனர். ஆண்டுதோறும் நியாய விலை கடைகளில் வழங்கக்கூடிய பொங்கல் தொகுப்பில் கரும்புகள்
கரும்பு விவசாயிகள்


நாமக்கல், ஜன.06 (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள சமய சங்கிலி பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கருப்பு பொங்கல் கரும்பு பயிரிட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் நியாய விலை கடைகளில் வழங்கக்கூடிய பொங்கல் தொகுப்பில் கரும்புகள் வழங்கப்பட்டு வருகிறது இந்த கரும்புகளுக்கு சமய சங்கிலி பகுதிக்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வந்து கரும்புகளை கொள்முதல் செய்து வந்தனர்.

கடந்த ஆண்டு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கரும்பு கொள்முதல் செய்வதில் லஞ்சம் மற்றும் 4000 கரும்புகளுக்கு 400 கரும்பு இலவசமாக கேட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்பொழுது நாமக்கல் மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் ஒரு சில பெரிய பணக்காரர்களின் காடுகளுக்கு சென்று அவர்களிடம் இலவச கரும்புகளை பெற்றுக் கொண்டும் கரும்புகளை கொள்முதல் செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து தங்களது விளைநிலத்தில் உள்ள கரும்புகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை என்றும் இலவச லஞ்சக் கரும்புகளை கேட்டு வருகிறார்கள் என தெரிவித்து தற்பொழுது சமய சங்கிலி பகுதியில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam