புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் வருகிற 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சுயமரியாதை திருவிழா - பிரதமர் மோடி பங்கேற்பு
புதுடெல்லி, 6 ஜனவரி (ஹி.ச.) கம்பீரமான சோம்நாத் கோவில், நம் நாட்டின் மேற்கு கடற்கரையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாஸ் பட்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது. துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம், நாடு முழுதும் உள்ள 12 ஜோதிர் லிங்கங்கள் பற்றி குறிப்பிடுகிற
வருகிற 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் சுயமரியாதை திருவிழா - பிரதமர் மோடி பங்கேற்பு


புதுடெல்லி, 6 ஜனவரி (ஹி.ச.)

கம்பீரமான சோம்நாத் கோவில், நம் நாட்டின் மேற்கு கடற்கரையில் குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபாஸ் பட்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

துவாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்திரம், நாடு முழுதும் உள்ள 12 ஜோதிர் லிங்கங்கள் பற்றி குறிப்பிடுகிறது. அதில், முதல் ஜோதிர்லிங்கமாக சோம்நாத் சிவலிங்கம் கருதப்படுகிறது.

இந்த சிவலிங்கத்தை தரிசித்தாலே ஒருவர் பாவங்களிலிருந்து விடுபட்டு, தன் நியாயமான விருப்பங்களை பெற்று, மரணத்திற்கு பின் சொர்க்கத்தை அடையலாம் என்றும் கூறப்படுகிறது.

லட்சக்கணக்கானோரின் பக்தியையும், பிரார்த்தனைகளையும் ஈர்த்த இந்த சோம்நாத் கோவில், துரதிருஷ்டவசமாக அழிவை நோக்கமாகக் கொண்ட வெளிநாட்டு படையெடுப்பாளர்களால் தாக்கப்பட்டது. பின், அது புத்துயிர் பெற்று மீண்டும் கம்பீரமாக நிற்கிறது.

இந்த நிலையில் புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் சுயமரியாதை திருவிழா வருகிற 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடக்கிறது.

இந்த திருவிழாவில் ஆன்மீக மற்றும் சமூக நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த கோவிலின் அறக்கட்டளை தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார்.

எனவே கோவில் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 11-ம் தேதி சோம்நாத் கோவிலுக்கு செல்கிறார்.

Hindusthan Samachar / JANAKI RAM