ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
புதுடெல்லி, 06 ஜனவரி (ஹி.ச.) பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜிக்கு இன்று (ஜனவரி 06) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 1972-ல் கேந்துஜர் மாவட்டத்தில் பிறந்த மாஜி, சந்தால் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தனது அ
ஒடிசா முதல்வர்  மோகன் சரண் மாஜிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து


புதுடெல்லி, 06 ஜனவரி (ஹி.ச.)

பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜிக்கு இன்று (ஜனவரி 06) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1972-ல் கேந்துஜர் மாவட்டத்தில் பிறந்த மாஜி, சந்தால் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தனது அரசியல் வாழ்க்கையை 1997-ல் தொடங்கினார்.

2024 சட்டமன்றத் தேர்தலில், அவர் கேந்துஜர் தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று, அதைத் தொடர்ந்து ஒடிசாவின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இன்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது,

ஒடிசாவின் கடின உழைப்பாளி முதலமைச்சர் திரு. மோகன் சரண் மாஜி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஒடிசாவின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்துவதற்கும், மாநிலத்தின் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் அவர் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மக்கள் சேவைக்காக அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வைப் பெற பிரார்த்திக்கிறேன்.

என்று கூறியுள்ளார்.

ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, நீங்கள் மாநிலத்தில் பொதுச் சேவைக்கும் நல்லாட்சிக்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறீர்கள்.

உங்கள் நீண்ட மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்காக ஜெகநாதப் பெருமானை நான் பிரார்த்திக்கிறேன், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b