புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி வவுச்சர் ஊழியர்கள் முற்றுகை போராட்டம்
புதுச்சேரி, 06 ஜனவரி (ஹி.ச.) புதுச்சேரி பொதுப்பணித்துறையில் ஆயிரத்து 300 வவுச்சர் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வவுச்சர் ஊழியர்களை பணி நி
புதுச்சேரி


புதுச்சேரி, 06 ஜனவரி (ஹி.ச.)

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் ஆயிரத்து 300 வவுச்சர் ஊழியர்கள் பணியாற்றி

வருகின்றனர்.

இவர்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

அரசு பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம்

செய்ய 15 ஆண்டாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் 10 ஆண்டு பணி

முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்வதாக சட்டசபையில் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் பணி நிரந்தரம் செய்யவில்லை. பல்வேறு துறைகளில் 3 ஆயிரத்துக்கும்

மேற்பட்டோர் வவுச்சர் ஊழியர்களாக சொற்ப சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர்.

மத்திய அரசு சட்டக்கூலி ரூ.27 ஆயிரம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை வவுச்சர் ஊழியர்கள் மூலம் நிரப்ப வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள்

கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் தலைமை செயலகத்தில் உள்ள அரசு

செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,

ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீண்ட நேரமாக காத்திருந்த ஊழியர்கள் அங்கு அரசு செயலர் முத்தம்மா வராததால் காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்து வெளியேறுமாறு

அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam