Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)
ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து திமுக அமைச்சர்கள் மீது அதிமுக புகார் அளித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஊழல் புகார்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காதது வருத்தமாக உள்ளது என கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது;
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு சிதைப்பதை எதிர்த்து நம் சகோதரிகள் மோட்டார் சைக்கிளில் 3580 கிலோ மீட்டர் பயணம் செய்து விழிப்புணர்வு செய்துள்ளனர். அவர்களை வரவேற்று பாராட்டி உள்ளோம் அவர்கள் பாராட்டும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி போராட்ட வடிவமைப்பை செய்துள்ளது. ஜனவரி 11ஆம் தேதி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்.
ஜனவரி 30 ஆம் தேதி அமைதியான உள்ளிருப்பு போராட்டத்தை தியாகிகள் தினமான வார்டு வட்டார பகுதிகளில் நடைபெறும். ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி ஆறாம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடைபெறும்.
பிப்ரவரி 7 முதல் 15 வரை மாநில காங்கிரஸ் தலைவர் தலைமையில் மாநில அளவிலான பெருந்திரள் மக்கள் போராட்டத்தை நடத்த உள்ளோம். கோரிக்கை பேரணிகளை நடத்த உள்ளோம்.
பாஜக அரசை கண்டித்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆதரவாக மகாத்மா காந்தி பெயர் நீடிக்க வேண்டும் சோனியா காந்தி வழிகாட்டுதல் பெயரில் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த புரட்சிகரமான திட்டத்தை எந்த சேதாரமும் சிதைவும் இல்லாமல் நடைமுறைப்படுத்த அகில இந்திய பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
பிரியங்கா காந்தி பங்கேற்கும் மாநாடு தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட மாநாட்டாக நடத்த உள்ளோம்.
எங்கள் கூட்டணி கட்சி தலைவர்களுடன் எங்களுக்கு எது தேவையோ அதை நாகரீகமாக கேட்போம். அவரவர்களுக்கு நீ சிறுமை இளச்சரிமை உள்ளது அது எங்கு பேசவேண்டும் என்று உள்ளது. எங்களுக்கு எங்கு தேவையோ அங்கு பேசுவோம்.
அதிகாரப்பகிர்வு அவர் பெற்றுத் தருவாரா? பத்திரிக்கையாளர் மத்தியில் ஏன் பேச வேண்டும். எங்கள் தொண்டர்கள் தலைவர்கள் சொல்வதற்கு கட்டுப்பட்டவர்கள்.எல்லோரையும் போன்று தான் தோன்றித்தனமாக அரவேக்காட்டுத்தனமான தொண்டர்கள் கிடையாது. அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவுக்கு சரி என்று சொல்வார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி ஆளுனரிடம் சந்தித்து ஊழல் பட்டியலை கொடுத்தது குறித்த கேள்விக்கு, கொடுத்தது யார் கொடுத்தார் என்று இருக்கு தானே? அவர் அமைச்சராக இருந்த போது நடந்ததற்கு ஏன் சி பி ஐ விசாரணை வேண்டாம் என்று சொன்னார்.
தமிழக முதலமைச்சரின் மீது ஒரே ஒரு வருத்தம் தான் இவர்கள் மீது எல்லாம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தீர்ப்பு குறித்த கேள்விக்கு, நீதிமன்ற தீர்ப்பை மதிப்பது வேறு. அந்தப் பகுதியில் எந்த அசம்பாவிதமும் உள்ளூர் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் என்று ஒன்று உள்ளது பார்க்கலாம்.
மேல் முறையீடு உள்ளது மேல்முறையீடு பார்ப்போம். நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் நாடி என்ன பரிகாரமோ அதை தேடிக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam