இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.) இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் இசை, பாடல்கள் ஹிட்டானதால்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான், தன்னுடைய முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் இசை, பாடல்கள் ஹிட்டானதால் பாலிவுட், ஹாலிவுட்டில் இருந்தும் ஏ.ஆர்.ரகுமானுக்கு வாய்ப்புகள் வர தொடங்கின. கடந்த 2008 ஆம் ஆண்டு ’ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஜெய்ஹோ பாடலுக்கு உலகின் உயரிய விருதான ஆஸ்கர் விருது கிடைத்தது.

மேலும் அந்த படத்தின் பின்னணி இசைக்காகவும் ஆஸ்கர் வென்ற ஏ.ஆர்.ரகுமான் ஒரே நேரத்தில் 2 ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றில் இடம்பிடித்தார்.

ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று

(ஜனவரி 6) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 06) எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

இசையால் எல்லைகளைக் கடந்து, எட்டுத்திக்கும் ஆளும் அன்பு இளவல் இசைப்புயல் திரு. ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

உங்களது இசையைப் போலவே நீங்களும் என்றும் இளமையோடும் துள்ளலோடும் திகழ்ந்து, தொடர்ந்து சாதனைகளைப் படைத்திட விழைகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b