முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடக்கம்
சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.) 2026-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 20 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே, முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி இந்த ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படுவத
Tamil Nadu Secretariat


சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)

2026-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 20 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே, முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி இந்த ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம்.

மேலும் முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்ற இருப்பதால், அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

அதன்படி, இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியிருக்கிறது.

அதில், சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், சட்டமன்ற தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்த ஒப்புதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் திட்டங்கள் மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் இன்று விவாதிக்கப்படும் எனவும் தெரிகிறது.

இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் இதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஏற்கெனவே தமிழக அரசின் உரையை ஆளுநர் புறக்கணித்துள்ள நிலையில், தற்போது கொடுக்கப்படும் உரையை ஆளுநர் வாசிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN