Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 6 ஜனவரி (ஹி.ச.)
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலிப் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் இன்று (ஜனவரி 06) முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்கள் செய்தி தொடர்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு, தெற்கு, மத்தியம்) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10/-கூடுதலாகப் பெற்று மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலிப் பாட்டிலை கொடுத்து ரூ.10 பெற்றுக்கொள்ளும் முறை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும், டாஸ்மாக் கடைகளில் காலிப் பாட்டில்களை சேகரிக்க, புதிய நபர்கள் வேண்டும், ஏற்கெனவே தங்களுக்கு வேலைப்பளு அதிகம் உள்ளதால் தங்களால் அவற்றை செய்ய முடியாது என்று விற்பனையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / JANAKI RAM