Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)
சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்காமல் டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுபாட்டிலை திரும்பப் பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்ததை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த திட்டத்தால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வேலை பளு அதிகரிப்பதாலும், பாட்டில்களை சேமித்து வைக்க போதிய இடம் இல்லை என கூறி சென்னை அம்பத்தூரில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வரும் டாஸ்மாக் ஊழியர்களளிடம் சென்னை மண்டல மூத்த அலுவலர் (Senior Regional Manager) பேச்சுவார்த்தை நடத்தினார் அதில் உடன்பாடு எட்டப்படாமல் தேல்வியில் முடிவடைந்துள்ளது.
எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க போவதில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் திட்டவட்டமாக கூறி போராட்டத்தை தொடர்கின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam