Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 06 ஜனவரி (ஹி.ச.)
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் மேலபுதுக்குடி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவரை காணவில்லை என அவரது மனைவி இரவு வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அது தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்குமார் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்பொழுது, ராம்குமாரை, கௌதம் என்ற நபர் அழைத்து சென்றதாக அவரது மனைவி தெரிவித்த நிலையில், கௌதமின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்பொழுது, அந்த செல்போன் எண்ணானது குற்றாலம் பகுதியில் இருப்பது தெரிய வரவே, குற்றாலத்திற்கு விரைந்து சென்ற வீரவநல்லூர் போலீசார் செல்போன் சிக்னல் காண்பித்த இடத்தில் உள்ள ஒரு லாட்ஜில் சோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது, அந்த லாட்ஜில் உள்ள ஒரு அறையில் ராம்குமார் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்த நிலையில், அருகாமையில் இருந்த ஒரு அறையில் மூன்று நபர்கள் போதையில் இருந்ததும் தெரியவந்தது,
அதனைத்தொடர்ந்து, அந்த மூன்று பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது, அதில் ஒருவர் ராம்குமாரை வீட்டிலிருந்து அழைத்து வந்த வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த கௌதம் என்பதும், அவருடன் இருந்த நபர்கள் . பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் முகமது ஆசிக் என்பதும் தெரியவந்தது.
அதனைதொடர்ந்து, அவர்களை குற்றாலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்த போது, ராம்குமாரை தாங்கள் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட நிலையில், ராம்குமார் மாவு மில் நடத்தி வருவதும், அவரது மில்லுக்கு எதிரே கௌதம் என்பவர் டெய்லர் கடை நடத்தி வரும் நிலையில், ராம் குமார் கௌதமை அடிக்கடி கேலி கிண்டல் செய்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆத்திரத்தில் இருந்த கௌதம் அவரது நண்பர்களான மணிகண்டன் மற்றும் முகமது ஆசிக் ஆகிய இருவரின் உதவியுடன் ராம்குமாரை குற்றாலத்திற்கு சுற்றுலா செல்வோம் என அழைத்து வந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN