Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 06 ஜனவரி (ஹி.ச.)
கடந்த நவம்பர் மாதம் ராம ரவிக்குமார் என்பவர் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை அன்று தீபம் ஏற்றுவது வழக்கம், சில வருடங்களாக மழையில்
உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் பழங்காலங்களாக
மலை உச்சியில் தர்கா அருகில் உள்ள தூணில்தான் தீபம் ஏற்றப்பட்டது.
வழக்கத்துக்கு மாறாக கோவில் நிர்வாகம் உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுகிறார்கள்.
எனவே ஐதீக முறைப்படி தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற
உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி சுவாமிநாதன் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றும் பொழுது தர்கா அருகில் உள்ள தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என
உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் இந்து சமய அறநிலையத்துறை நூறாண்டுகளாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவிலில் தீபத்தை ஏற்றியது.
உடனடியாக ராம ரவிக்குமார் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன் தாக்கல் செய்யப்பட்டது. மனு தாக்கல் செய்த உடனே விசாரணைக்கு
எடுத்த நீதிபதி உயர்நீதிமன்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர்கள் உதவியோடு
தீபத்தை ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இது மிகப் பெரிய ஒரு
சர்ச்சையை கிளப்பியது இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்தது.
உடனடியாக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த நாளே எடுத்த நீதிபதி சுவாமிநாதன் மதுரை மாவட்ட ஆட்சியர் மாநகர காவல் துறை ஆணையாளர் நீதிமன்றத்தில்
ஆஜராக வேண்டும் என்றும் தமிழக காவல்துறை உதவியுடன் மலை உச்சியில் தீபத்தை ஏற்ற
வேண்டும் என மீண்டும் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
இந்நிலையில் தமிழக அரசு, வக்பு வாரியம், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் உள்ளிட்டோர் தரப்பில் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்
எனவும் தனி நீதிபதி நீதிமன்ற வரம்புகளை மீறி சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளார்.
மேலும் தனிநபர் ஒருவர் வழிபாடு உரிமைகள் கோற முடியாது அவ்வாறு கோரினால் உரிமைகள் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றும் அதே நேரத்தில் நீதிமன்ற
அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றாமல் எடுத்து உள்ளார்.
எனவே தனி நீதிபதி உத்தரவு என்பது சட்டவிரோதமானது அதனை ரத்து செய்ய வேண்டும் என
மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது தமிழ்நாடு அரசு தரப்பில் அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ்.ராமன் , வீரா கதிரவன், ரவீந்திரன்.
ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதே போல் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜோதி, விகாஸ் சிங், ஆஜராகி வாதிட்டனர்.
ராம ரவிக்குமார் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தனி நீதிபதியின்
உத்தரவு சரியே என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள் தீபம் ஏற்றும் விவகார
வழக்கை விசாரணை முடித்து தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்தி
வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு 170 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு வழங்கியது.
அதில் மலை உச்சியில் உள்ள தூண் கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடத்தில்
தான் உள்ளது. எனவே தேவஸ்தானத்திற்கு சொந்தமான மலை உச்சியில் உள்ள தூணில் தான் தீபம் ஏற்றி இருக்க வேண்டும்.
ஆனால் அங்கு தீபம் ஏற்றுவது இரு சமூகங்கள் இடையே பிரச்சனைகள் எழும் என மாநில அரசின் அச்சம் தேவையற்றது.
மாநில அரசு இரு சமூகங்களுடைய அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான உறவை
மேம்படுத்த வேண்டும்.
ஆனால் வருடம் தோறும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் ஏற்படாமல்
பிரச்சனைகளை மூன்டுள்ளன.
இந்த வழக்கில் வக்பு வாரியத்தின் மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கனவே 1994 ஆம் ஆண்டு நீதிபதி கனகராஜ் உத்தரவில் தீபம் ஏற்ற மாற்று இடம் தேர்வு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளார்.
அதில் இந்த புதிய இடம் தர்கா
சொத்திருக்கு 15 மீட்டர் அப்பால் இருக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார்.
எனவே அந்த தீர்ப்பின் நோக்கம் இருதரப்பின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதே நோக்கம்.
பொதுவாக கார்த்திகை தீபத்திருநாளின் போது உயரமான இடத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமானது. ஏனென்றால் மலை உச்சியில் ஏற்றும் தீபம் பக்தர்கள் அனைவரும்
வழிபடுவதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
ஒளி என்பது சிவபெருமானின் உருவகமாகும். உயர்ந்த இடத்தில் தீபம் ஏற்றுவது தான் சரியாக இருக்கும். தீபம் ஏற்ற இடம் இருக்கும்போது அதனை ஏற்க மறுப்பது
நியாயமற்றது.
ஒவ்வொரு வருடமும் இந்த பிரச்சினை எழுந்து வருகிறது. அப்போது இரு தரப்புக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
எனவே இந்த நீதிமன்றம் உத்தரவை பின்பற்றுவதன் மூலம் இரு தரப்பினர் இடையே பிரச்சனைகளை நீக்கி சமூக ஒற்றுமை ஏற்படுத்தப்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.
எனவே மலை உச்சியில் உள்ள தீபத்தூனில் விளக்கு ஏற்ற வேண்டும் விளக்கு ஏற்றும்
போது தொல்லியல் துறையின் உரிய சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டும்.
வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கோவில் நிர்வாகம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் போது பொதுமக்கள்
யாரையும் அனுமதிக்க கூடாது. தீபம் ஏற்ற எத்தனை பேர் செல்ல வேண்டும் என்பதை
தொல்லியல் துறையினர் முடிவு செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் மாநகர காவல் துறையின் பாதுகாப்பில், கோவில்
நிர்வாகம் சார்பில் தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த உத்தரவுகளை மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும், நிறைவேற்றி இரு தரப்பினர் இடையே நட்பு பாலத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam