திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டதை பெண்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
திருப்பரங்குன்றம், 06 ஜனவரி (ஹி.ச.) திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மதுரை தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்பட்டிர
பெண்கள்


திருப்பரங்குன்றம், 06 ஜனவரி (ஹி.ச.)

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மதுரை தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அந்த வழக்குக்கான விசாரணை கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது.

இதில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய இரண்டு நீதிபதி அமர்வு தர்கா கோவில் நிர்வாகம் என பல்வேறு தரப்பிடம் விசாரணை நடத்திய நிலையில்.

இன்று அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தனி நீதிபதியே ஜி ஆர் சுவாமிநாதன் அளித்த தீர்ப்பின்படி மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் கே கே ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் இனிப்பு வழங்கி மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் மலை அடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஏற்கனவே இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / Durai.J