Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 06 ஜனவரி (ஹி.ச.)
உயர்நீதிமன்றம் உறுதி செய்து இருக்கிறது உயரத்தில் அமைந்திருப்பது தீபத்துண் தான் என்று, இந்த தீர்ப்பை வரவேற்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருப்பரங்குன்றம் தீர்ப்பு திருப்பத்தை தரும் தீர்ப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தை திருப்பி அனுப்பக்கூடிய தீர்ப்பு,
உயர்நீதிமன்றம்
உறுதி செய்து இருக்கிறது உயரத்தில் அமைந்திருப்பது
தீபத்துண் தான்.
தீர்க்கமான தீர்ப்பு இது
தமிழக அரசாங்கம
தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல்
மன உணர்வை மத உணர்வாக சித்தரித்து
அமைதியான நிகழ்வை
அமைதியை சீர்குலைக்கும் என்ன முன்னிறுத்தி
ஆன்மீகத்தை அரசியலாகியதற்கு
அழுத்தமாகவே கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
உயர்நீதிமன்ற கண்டனத்தையும்
மக்களின் கண்டனத்தையும் பெற்ற திமுக அரசு கண்டிப்பாக வீட்டுக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்றும் பொழுதும் அது திருப்பரங்குன்ற விளக்காக பிரதிபலிக்கும்.
பரிதவிக்கும் மக்களுக்கும் உண்மையான விடிவு காலம் பிறக்கும் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ