திருப்பதியில் திருமணத்துக்கு புறம்பான உறவு பின்னணியில் பெண் கொலை - காதலன் தற்கொலை
திருப்பதி, 06 ஜனவரி (ஹி.ச.) திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் குத்திவாரிபள்ளிக்கு சேர்ந்த சோமசேகர் திருப்பதியில் கேஸ் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். மனைவியுடன் பிரிந்து கொர்லகுண்டா பகுதியில் உள்ள மாருதிநகரில் தனியாக வாழ்ந்து வருகிற
கொலை


திருப்பதி, 06 ஜனவரி (ஹி.ச.)

திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா மண்டலம் குத்திவாரிபள்ளிக்கு சேர்ந்த சோமசேகர்

திருப்பதியில் கேஸ் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார்.

மனைவியுடன் பிரிந்து

கொர்லகுண்டா பகுதியில் உள்ள மாருதிநகரில் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கேஸ் டெலிவரி செய்யும் போது ஜீவகோனா பகுதியைச் சேர்ந்த சாம்பலட்சுமி (லட்சுமி) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம்

படிப்படியாக திருமணத்துக்கு புறம்பான உறவாக மாறியது.

தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி. வாழ்வாதாரத்துக்காக

கணவர், மகனுடன் சில காலத்துக்கு முன்பு திருப்பதியில் உள்ள ஜீவகோனாவுக்கு

குடிபெயர்ந்தார். ஆர்டீசி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு சமோசா கடையில் லட்சுமி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்த உறவு பற்றி கணவருக்கும் மகனுக்கும் தெரிந்தால் மானம் போய்விடும் என இனி திருமணத்துக்கு புறம்பான உறவை தொடர முடியாது, என்னை

தொந்தரவு செய்யாதே என லட்சுமி சோமசேகரிடம் கூறினார்.

அதனால் கடைசியாக

பேசிக்கொள்ளலாம் எனக் கூறி சோமசேகர் அவரை தன் அறைக்கு அழைத்தார்.

திங்கட்கிழமை பேச்சுவார்த்தைக்கு சென்ற லட்சுமி மீது சோமசேகர் தாக்குதல் நடத்தினார்.

வீட்டில் இருந்த கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். அதன் பிறகு வீட்டில் உள்ள பேனுக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து

கொண்டார்.

அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பதி போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு

அனுப்பி வழக்கு விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam