Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜனவரி (ஹி.ச)
அரசு விரைவுக் போக்குவரத்துக் கழகத்திற்கு 37.98 கோடி ரூபாய் மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து முனையங்கள் அமைத்தல், பேருந்து நிலையங்களை பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளோடு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை போக்குவரத்துத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு அதி நவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக
61 புதிய பேருந்துகளின் இயக்கத்தை இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு பேருந்திலும், 31 இருக்கை மற்றும் 15 படுக்கை வசதிகள் உள்ளன.
பேருந்தின் சிறப்பம்சங்கள்:
*இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற Air Suspension வசதி செய்யப்பட்டுள்ளது.
*படுக்கை வசதி அதிகரித்த இடம் மற்றும் இரண்டு படுக்கைகளுக்கு இடையே தடுப்பு வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக தனிப்பட்ட சார்ஜிங் போர்ட்கள்.
ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக பயணிகள் வசதிக்காக தனித்தனி மின்விசிறி.
பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது.
நடத்துனர் பயணிகளுக்கு தகவல்களை அறிவிப்பதற்காக ஒலி பெருக்கி (Micro Phone) அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் கடிகராம் அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதியுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அரசு நிர்ணயம் செய்த அளவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் புதிய பேருந்துகளின் Engine என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக நவீன எலக்ட்ரானிக் மேக்னடிக் ரிடார்டர் (EMR) நிறுவப்பட்டுள்ளது.
இன்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானித்து, தீ கட்டுபாட்டு அமைப்பு (FDSS) கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி வைக்கப்பட்ட பேருந்துகள் அண்டை மாநிலங்கள் செல்லும் வழித்தடம் மற்றும் தமிழ்நாட்டில் மலைப்பாங்கான பகுதிகளிக்கு செல்லக்கூடிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ