Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜனவரி (ஹி.ச.)
சென்னையில் 9-ந்தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணல் திருத்தி அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டசபை தேர்தல்களில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடன் 9-ந் தேதி ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள நேர்காணல் திருத்தி அமைக்கப்படுகிறது.
அதன்படி அன்றைய தினம் காலையில் சேலம் மாநகர், சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்கிறது.
மாலையில் நாமக்கல், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரிக்கு நேர்காணல் நடக்கிறது.
இந்த நேர்காணலில், மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தொகுதி பற்றிய நிலவரங்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரங்களை அறிந்திட, தங்களுக்காக விருப்ப மனு அளித்துள்ளவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல், வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b