Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 07 ஜனவரி (ஹி.ச)
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என நடிகர் சரத்குமார் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு செல்லும் எனவும், இதனை எதிர்த்த மேல் முறையீடு செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தீபத் தூண், கோவிலுக்கே சொந்தமானது என்பதையும் உறுதி செய்து, முருக பக்தர்களின் உள்ளத்தில் எல்லையில்லா ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறந்த நியாயமான தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்கும் அதேசமயத்தில், தீர்ப்பை ஏற்று அதனை செயல்படுத்திட தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ