Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 07 ஜனவரி (ஹி.ச.)
இயக்குனர் கே பாக்யராஜ் இன்று 73 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
மேலும் அவர் திரை துறைக்கு வந்து 50 ஆண்டுகளில் நிறைவு செய்த நிலையில்
50 ஆண்டு திரைப்பயணத்தில் ஆதரவளித்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு நடைபெற்றது.
அதில் சிலர் சுவாரசிய விஷயங்களை இயக்குனர் பாக்கியராஜ் பகிர்ந்தார்,
சினிமா துறையில் 50 ஆண்டுகளை கடந்து விட்டேன் என்பதை நம்ப முடியவில்லை
சென்னை வந்த பிறகு பெரும் போராட்டத்திற்கு பிறகு எனக்கு வாய்ப்பு கிடைத்தது
எனது இயக்குனர், குருநாதர் பாரதிராஜா எப்படி பிரபலமாகி வந்தாரோ அப்படி, உதவி இயக்குநராக இருந்தபோது நானும் பிரபலமாகி வந்தேன் அதற்கு பலரும் உறுதுணையாக இருந்தார்கள்.
இயக்குனர் பாரதிராஜா என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பார் என ஏற்கெனவே என் அம்மா சொன்னார்.
ஹீரோ ஆனது மகிழ்ச்சி.. ஆனால், என் முதல் படம் புதிய வார்ப்புகள் வெளியாவதற்கு முன்னே நிகழ்ந்த அம்மாவின் மரணம் என்னை பாதித்தது.
தொடக்கம் முதல் இன்றுவரை எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி
சினிமாவுக்கு வந்தபின்னரே ஒவ்வொன்றையும் நான் கற்றுக் கொண்டேன்
எனக்கு முன்னே சினிமாவில் இருந்த இயக்குநர்களின் தாக்கம் எனக்குள் இருந்ததுபுத்தகங்களும் என் அறிவை கூர் தீட்டியது.
சிறுவயதில் தேன் மிட்டாய் வாங்குவதற்காக காலனாவுக்கு பதிலாக தங்க மோதிரத்தை கடையில் கொடுத்துவிட்டேன். அந்த கடைக்காரர் மோதிரத்தை என் வீட்டில் கொடுத்துவிட்டார். அதுமுதல் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்
எனக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்களுடன் இன்றுவரை தொடர்பில் உள்ளேன்.
அவர்கள் மீதான மரியாதை கொஞ்சம் கூட குறையவில்லை. ஆரம்பத்தில் நடிகர் ரஜினி அவர்களுக்கு தமிழ் அவ்வளவாக படிக்க வராது.
நான் தான் சொல்லிக் கொடுப்பேன் சூட்டிங் தொடங்குவது முன் நிறைய தடவை பிராக்டிஸ் பண்ணிட்டு படத்துல பேசுவாரு.
ஆரம்பத்துல அக்கறையுடன் அவர் எடுத்துக்கொண்ட சேரத்தையும் இப்போது வரைக்கும் கடைப்பிடிக்கிறார்.
இந்த வருஷத்துல இருந்து படம் இயக்குவது மற்றும் வெப் சீரிஸ் பண்ணுவது குறித்து முடிவு செய்துள்ளேன் என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ