Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 07 ஜனவரி (ஹி.ச.)
ஈரோட்டில் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடர்புடைய வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
அதன் பின் நீதிமன்ற வளாகத்தில் சீமான் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது பேசுகையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை பிப்ரவரி 21 ஆம் தேதி அறிவிக்கப்படும். தேர்தல் வருவதையொட்டி மடிக்கணினி உள்ளிட்ட வாக்குறுதிகள் திமுக அரசு செய்தி வருகிறது.
துப்புரவு பணியாளர்கள்,பகுதி நேர ஆசிரியர்கள் குரல் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. ஆட்சியாளர்கள் வழக்கமாக ஏமாற்றும் வேலையாக உள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரம் இருமத முக்கிய தலைவர்களை அழைத்துப் பேசி தீர்த்து இருக்க வேண்டும் மாறாக பிரச்சனையாக்கப்பட்டது திமுக அரசு தான்.
தமிழகத்தில் கஞ்சா பழக்கம் ஜீரோ என அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார் குறித்த கேள்விக்கு தமிழகத்தில் மது கடைகளை அரசு திறந்து வைத்து வேடிக்கை பார்க்கிறது.
விற்பனையை அதிகரிக்க கோரி சேலத்தில் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அதே சமயத்தில் பள்ளி, கல்லூரிகளில் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை இருந்து வருகிறது. கஞ்சா சாக்லேட் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN