Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 07 ஜனவரி (ஹி.ச.)
தேனி மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பி.ஆர்.ஓ-வாக பணியாற்றியவர் சண்முகசுந்தரம். இவர் பணிபுரிந்த போது தேனி மாவட்டம் தென்கரைப் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகன் சூரிய நாராயணன் என்பவருக்கு ஏ.பி.ஆர்ஓ பணி வாங்கி தருவதாக கூறி பல்வேறு தவணைகளில் 50 லட்சம் ரூபாயை சண்முகசுந்தரமும் அவரது மனைவி செண்பகவள்ளியும் வாங்கியதாக கூறப்படுகிறது.
பணம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகியும் அரசு வேலை வாங்கித் தராமல் தொடர்ந்து காலதாமதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சண்முகசுந்தரம் பல்வேறு இது போன்று பல்வேறு நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும் சுமார் 74 லட்ச ரூபாய் பணம் மோசடியில் சண்முகசுந்தரம் ஈடுபட்டதாக சாந்திக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து சாந்தி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது தொடர்பான புகாரை அளித்து இருந்தார்.
இதனை அடுத்து இது குறித்து விசாரணை நடத்துமாறு தேனி மாவட்ட பொருளதார குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
இதனை அடுத்து விசாரணை நடத்திய காவல் துறையினர் பி ஆர் ஓ சண்முகசுந்தரம் மற்றும் அவரது மனைவி செண்பகவள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது சண்முகசுந்தரம் சேலம் போக்குவரத்து பிஆர்ஓவாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / GOKILA arumugam